பியர்ல் ஹார்பர், இரட்டை கோபுர தாக்குதல்களை விட கொரோனாவால் மிக மோசமான அழிவு: டிரம்ப் வருத்தம்

வாஷிங்டன்: ‘‘பியர்ல் ஹார்பர் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல்களை விட கொரோனா வைரசால் மிக மோசமான அழிவு ஏற்பட்டுள்ளது’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனா, அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு தற்போது 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72,721 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இரண்டாம் உலகப்போரின்போது பியர்ல் ஹார்பர் துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படை நடத்திய தாக்குதல், நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது அல்ெகாய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்  ஆகியவற்றை விட கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிக மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

Related Stories:

>