×

சென்னையில் பரபரப்பு: அதிமுக மாஜி எம்பிக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முன்னாள் அதிமுக எம்பிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசாருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது.  இந்தநிலையில்  அதிமுக மத்திய சென்னை முன்னாள் எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார் இரு நாட்களுக்கு முன் பரிசோதனை நடத்தினார். அவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதியானது.

ஆனால் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இல்லாததால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Tags : Chennai ,Corona ,AIADMK , Chennai, Adhikamu Maji MP, Corona
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...