×

மீண்டும் படப்பிடிப்பு நடத்த வழிகாட்டும் நெறிமுறை: தயாரிப்பாளர் கூட்டமைப்பு உருவாக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்னும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு படப்பிடிப்புகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்பு ஒரு வழிகாட்டும் நெறிமுறையை உருவாக்கி வருகிறது. இதனை விரைவில் மத்திய அரசிடம் ஒப்படைத்து ஒப்புதல் பெற இருக்கிறது. இதுகுறித்து கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
திரைப்பட படப்பிடிப்பு என்பது பலரின் உழைப்பு தொடர்புடையது. குறிப்பாக மனித உழைப்பை சார்ந்தது. கொரோனா ஊடரங்கு காலத்திற்கு பிறகும் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்பதால் அதற்கேற்ப படப்பிடிப்புகளை எப்படி நடத்தலாம் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கி வருகிறோம்.

இதனை நாங்கள் அரசிடம் ஒப்படைத்து படப்பிடிப்பு பணிகளை தொடங்கி விட்டோம் என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. பல்துறை வல்லுனர்கள் இணைந்து இதனை உருவாக்குகிறார்கள். இந்த பணி இன்னும் முடிவடையவில்லை. முடிந்த பிறகு அரசிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : e-shooting, Producer Consortium Formation
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...