×

டாஸ்மாக் கடைக்கு 2 போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 2 காவலர்கள் தலைமையில் 3 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மாநிலம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. வழக்கமாக டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இயங்கி வந்தது. ஆனால் இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த மாவட்ட கண்காணிப்பார்களுக்கு  தமிழக டிஜிபி திரிபாதி அவரச சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 காவலர்கள் தலைமையில் 2 ஊர் காவல் படையினர் மற்றும் தன்னார்வலர் ஒருவர் கட்டாயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூட்டத்தை பொறுத்து டாஸ்மாக் கடைகளில் கவுன்டர்கள் அதிகளவில் திறக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கடைகள் முன்பு நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாக வரும் கடைகள் முன்பு 4 காவலர்கள், 4 ஊர் காவலர்கள் மற்றும் 4 தன்னார்வலர்கள் கட்டாயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

கடைகள் முன்பு கட்டாயம் போலீஸ் வாகனம் நிறுத்தி இருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்களை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள்  தலைமையிலான பறக்கும் படைகள் அடிக்கடி ஆய்வு செய்து கூட்டம் சேராமல் உறுதி  செய்ய வேண்டும். பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடைகளில் தேவைப்பட்டால் அதிவிரைவு படையினரையும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்த வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Task Force 2 , Task Shop, 2 Police Security, DGP Tripathi
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...