×

ரூத்தர தாண்டவம் எடுக்கும் கோயம்பேடு மார்கெட்: சென்னை, விழுப்புரம், அரியலூர், கடலூரை குறிவைக்கும் கொரோனா வைரஸ்

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் சென்னையில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கிண்டியில் 11 பேருக்கும், திருவான்மியூரில் 13 பேருக்கும், குமரன் நகரில் 5 பேருக்கும், கண்ணகி நகருக்கு ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை வேளச்சேரியில் கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறி வாங்கி வந்து வண்டியில் வீதி வீதியாக காய்கறி விற்பனை செய்யும் நபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்நத 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி விற்பனை செய்யும் நபர் மற்றும் அவரது மகனுக்கு முதலில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் சென்ற 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலயைில் கோயம்பேடு சந்தையில் இருந்து யார் எங்குச் சென்றாலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து அரியலூர் சென்ற மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அரியலூரில் கொரோனாவால் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 168-ஆக உள்ளது.

Tags : Cuddalore ,Ariyalur ,Chennai ,Corona , Coimbatore Market,Ruthara Thandavam,Corona virus targeting Chennai, Villupuram, Ariyalur, Cuddalore
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...