×

லாரிகளில் வரத்து அடியோடு நின்றது சென்னையில் நாளை முதல் காய்கறி விலை உயரும்: திருமழிசைக்கு மொத்த வியாபாரிகள் செல்ல மறுப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறி வரவில்லை. இதனால் இருந்த  காய்கறிகள் நேற்று வரை விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலையிலும் மாற்றம் இல்லாமல் இருந்தது. நாளை முதல் காய்கறி விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது, கோயம்பேட்டில் 400 மொத்த காய்கறி கடைகள், 400 சில்லரை கடைகள் இயங்கி வந்தன. இந்த கடைகளை திருமழிசைக்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருமழிசை என்பது கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.

அவ்வளவு தூரம் போய் காய்கறிகளை விற்பனை ெசய்வது என்பது முடியாத காரியம். வ்வாறு காய்கறி கடைகளை மாற்றினாலும் காய்கறிகளை விற்பனை செய்ய தொழிலாளர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வேலைக்கு வர மறுக்கின்றனர். லாரிகளில் காய்கறி வருவதும் குறையதான் அதிக வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்று நோய். எவ்வாறு பரவுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது கோயம்பேடு மார்க்கெட்டை கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டை நம்பிதான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது திருமழிசைக்கு மாற்றப்பட்டால் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் போவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி அவர்கள் போகாத பட்சத்தில் சில்லரை வியாபாரிகளின் தேவைக்கு காய்கறி கிடைக்காது. இதனால், காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : Chennai ,buyers , Lorries, Chennai, Vegetable prices are rising, Merchants
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...