×

குடந்தை, திருவிடைமருதூர் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி: நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க கோரிக்கை

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதுார் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மண்பாண்டத்தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள், களிமண்ணால் பானை, குடம், கூஜா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரி–்த்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் இவர்கள் தயாரித்து வைத்துள்ள பானைகளை விற்க முடியாமல் காத்துக் கிடக்கின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக மண்பாண்டத்தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைய அல்லது பொருட்களோ வழங்க வேண்டும். தேங்கியுள்ள மண்பாண்டங்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாத்தி பகுதியை சேர்ந்த கண்ணன் கூறுகையில், களி மண்ணை உரிய அனுமதியில்லாமல் எடுக்க கூடாது என்ற உத்தரவால் மண்பாண்டத்தொழில் நலிவடைந்து வருகிறது. கூடுதலாக விலை கொடுத்து களி மண்ணை வாங்கி, மண்பாண்டங்களை செய்து, விற்பனை செய்ய முடியாமல் காத்துக்கிடக்கின்றோம். எனவே. மாவட்ட நிர்வாகம் அக்னி நட்சத்திரம் துவங்கியதால் பானைகளை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும். நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். களி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.



Tags : Thiruvidaimarudur ,Pottery Workers ,Pottery Workers of Livelihood , Livelihood ,Pottery, Thiruvidaimarudur, Kundantha
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை