வரலாற்றில் முதல் முறையாக ஹிந்து மதத்தவரை பைலட்டாக நியமனம் செய்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: வரலாற்றில் முதல் முறையாக ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரை பாகிஸ்தான் தனது விமானப்படையின் பைலட்டாக நியமனம் செய்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தர்பார்கர் என்னும் சிறிய மாவட்டம் உள்ளது. இது ஹிந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு உணவு, தண்ணீர் பிரச்சனை அதிகம். அந்தப் பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியில் ராகுர் தேவ் என்னும் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் வசித்து வருகிறார். அவர் தற்போது பாகிஸ்தான் விமானப் படையில் பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக விளங்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் விமானப்படையின் விமானியாவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உட்பட பல சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர் ஒருவர் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் தேவின் நியமனம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அனைத்து பாகிஸ்தானிய ஹிந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி என கூறினார்.. ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ராணுவம், மருத்துவம், குடிமைப்பணி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசாங்கம் இது போன்று சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்தத் தொடங்கினால் வரும் நாட்களில் பல ராகுல் தேவ்கள் நாட்டுக்காக சேவை புரிய தொடங்குவர் என அவர் தெரிவித்தார்.

Related Stories: