×

சீனா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியதா? மடகாஸ்கர்; எங்கள் மருந்து கொரோனாவையும் அழிக்க வல்லது; அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா அறிவிப்பு

அன்டனானாரிவோ: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ்  பாதிப்பிலிருந்து எப்போது தீர்வு கிடைக்கும்? எத்தனை நாட்கள் இது நம்முடன் இருக்கும்? உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து  கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை எதையும் யாராலும் உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் ஆய்வு பணிகளை மிக வேகமாக நடத்தி வருகின்றன. தற்போதைய சூழலில் எந்த  நாடு முதலில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கிறதோ அந்த நாடு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரசுக்கான  தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என பல ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள்  மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை சீனா தான் முதலில் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூலிகை மருந்து மூலம் தங்கள் நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்தி உள்ளதாக மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா அறிவித்துள்ளார். அந்தத் தீவுகளில் காணப்படும் ஆர்டிமீஸியா என்ற தாவரத்தில் இருந்து  மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து கொரோனா நோயையும் அழிக்க வல்லது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று  பெயரிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறிய ஆன்ட்ரோ செய்தியாளர்கள் முன்னிலையில் அதனை அருந்தியும் காட்டினார்.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆன்ட்ரோ வெளியிட்டுள்ளார். நோய்த் தொற்றினால் மடகாஸ்கரில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதும் உயிரிழப்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வல்லரசு நாடுகளான சீனா,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே கொரோனா தடுப்பு மருத்து கண்டுபிடிக்காத வேலையில் மடகாஸ்கர் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது பல்வேறு நாட்டு தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது.


Tags : China ,US ,Madagascar ,Andr Ann Regolina ,Andrரே Regolina ,Announcement , Did China back the US? Madagascar; Our medicine has the power to destroy the corona; Announcement of President Andr ஆன் Regolina
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...