×

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 309 வாகனங்களில் 621 பேர் வேலூர் மாவட்டத்துக்கு வருகை: 14 வாகன சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

வேலூர்: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேலூர் மாவட்டத்துக்கு 309 வாகனங்களில் 621 பேர் வந்துள்ளனர். 14 வாகன சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மத்திய அரசு வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் ெவளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட எல்ைலயிலேயே கொரோனா தொற்று சோதனை செய்யும் பொருட்டு மாவட்டம் முழுவதும் புதிதாக 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வௌிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்களை சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தி விவரங்கள் கூகுள் டிவைஸ் மூலம் சேகரிக்கப்படுகின்றன.

அதன்படி இதுவரை வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை உட்பட பல்ேவறு மாவட்டங்களிலிருந்து 309 வாகனங்களில் 621 பேர் வேலூர் மாவட்டத்திற்கு திரும்பி உள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ேநற்று முன்தினம் முதல் நேற்று காலை 11 மணி வரை இதுவரை மொத்தம் 309 வாகனங்கள் வந்துள்ளன. இதில் மொத்தம் 621 பேர் வந்துள்ளனர். அதில் ராணிப்பேட்டையில் இருந்து 48 பேரும், திருவண்ணாமலையில் இருந்து 7 பேரும், சென்னையில் இருந்து 152 பேரும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பேரும், திருச்சியிலிருந்து 3 பேரும், திருவள்ளூரிலிருந்து 6 பேரும், கிருஷ்ணகிரியில் இருந்து 8 பேரும், செங்கல்பட்டில் இருந்து 4 பேரும், சேலத்தில் இருந்து 2 பேரும், திருப்பத்தூரில் இருந்து 27 பேரும், பிறமாநிலங்களிலிருந்து 18 பேரும், திண்டுக்கல், தூத்துக்குடி, கரூர், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் வந்துள்ளனர்.

பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வாகனங்களில் வேலூர் தாலுகாவுக்கு 202 வாகனங்களும், காட்பாடிக்கு 34 வாகனங்களும், அணைக்கட்டுக்கு 24 வாகனங்களும், பேரணாம்பட்டுக்கு 8 வாகனங்களும், குடியாத்தத்துக்கு 37 வாகனங்களும், கே.வி.குப்பத்துக்கு 9 வாகனங்களும் வந்துள்ளன. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வருபவர்கள் ஓடியும், ஒளியவும் முடியாத அளவுக்கு அவர்களை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : districts ,Vellore district ,Chennai ,vehicle checkpoints , vehicles ,various ,intensive, checkpoints
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு