×

நுரையீரல் முழுக்க நூற்றுக்கணக்கான புழுக்கள் : பாம்பை பச்சையாக உண்ட சீன இளைஞருக்கு நேரிட்ட ஆபத்து

பெய்ஜிங் : உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸிற்கு முக்கிய காரணம் சீனர்களின் உணவு பழக்க வழக்கம் தான் என உலகம் முழுவதும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞருக்கு திடீரென வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் இளைஞரிடம் அவர் எடுத்துக் கொண்ட உணவுகளை பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு இளைஞரோ, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தாம் கடல் உணவுஉண்டதாகவும் நத்தைகள் நிறைய சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பாம்பின் பித்த பையை தாம் பச்சையாகவே சாப்பிட்டதாகவும் இளைஞர் கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ந்த டாக்டர்கள் உடனடியாக ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.அப்போது நுரையீரல் முழுவதும் உயிருடன் புழுக்கள் நெளிந்துள்ளதை மருத்துவர்கள் அறிந்தனர். உயிரினங்களை இப்படி பச்சையாக உண்பதால், அதில் உள்ள புழுக்களின் முட்டை உடலுக்குள் சென்றுவிடும்.பிறகு அதுவே கொடிய நோயாக பின்னாளில் மாறும் என்கின்றனர்..

பாம்பை பச்சையாக முழுங்கிவிட்டு, அதில் இருந்து புழுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.தற்போது அந்த நபருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சீனாவில் 14 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Hundreds ,Chinese , Lung, Hundreds, Worms, Snake, Green, Undated, Chinese Youth
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...