கொரேனாவால் உயிரிழப்போரின் உடலை அடக்கம் செய்ய என்னுடைய நிலத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்: ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை வீரர்

சேலம்: கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் உடலை அடக்கம் செய்ய என்னுடைய நிலத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை வீரர் செல்வ ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் கொரோனா வைரஸ்வால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கின் போது நிகழந்த தூயர சம்பவத்தை மன சேதனை அடைந்த செல்வ ராமலிங்கம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் சடலத்தை புதைக்கவோ, இறுதிச் சடங்கு செய்யவோ தனது நிலத்தை பயன் படுத்திக் கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் மருத்துவர்கள் எல்லாரும் ராணுவ வீரர்களுக்கு சற்றும் குறையாதவர்கள் எனவும், கடவுளுக்கு சமமானவர்கள் என அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்தார். எனவே இத்தகைய உயர்நிலையில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டமோ அல்லது நாமக்கல் மாவட்டதிலேயே யாரெனும் கொரோனாவால் உயிரிழந்தார் அவர்களுடைய உடலை அடக்கம் செய்ய என்னுடை நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். மேலும் சேலம்இ நாமக்கல் மட்டுமல்லாமல் வேறு எந்த மாவட்டத்தில் இருந்தாலும் அவர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார்.

Related Stories:

>