×

மாஸ்க் அணிந்த முகத்துடன் ஐபோனை திறக்க முடியுமா?ஆப்பிள் புது முயற்சி

சான்பிரான்சிஸ்கோ: நடுத்தர மற்றும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில், முக அடையாளத்தை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதி  உள்ளது. போனுக்கு முன்பாக முகத்தை காட்டும்போது, முன்புற கேமரா, போனுக்கு உரியவர் இவர்தானா என்பதை அடையாளம் காண்கிறது. உறுதி  செய்ததும் போன் அன்லாக் செய்யப்படுகிறது. ஐபோனில், முகத்தின் மூலம் போனை திறக்கும் ‘பேஸ் அன்லாக்’ வசதியை பலர் பயன்படுத்துகின்றனர்.  கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், வீட்டில் இருக்கும்போதே முக கவசம் அணிகின்றனர். முக கவனம் அணிந்திருக்கும்போது பேஸ்  அன்லாக் வசதி வேலை செய்வதில்லை.

இதற்காக மாஸ்கை கழற்ற வேண்டியள்ளது. எனவே, மாஸ்க் அணிந்தபடி ஐபோனை  முக அடையாளம்  காட்டி திறக்கும் வசதியுடன் மேம்படுத்தி ஐஓஎஸ் 13.5ஐ எப்போது அறிமுகம் செய்வோம் என்று ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கவில்லை. எனினும், இந்த வசதியை விரைவில் வெளியிடப்படும்; ஆய்வுகள் நடந்து வருகின்றன என ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.



Tags : Mask Team, iPhone, Apple
× RELATED ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.440 எகிறியது