×

ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.440 எகிறியது

சென்னை: தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது. 13ம் தேதி ஒரு சவரன் ரூ.53,280, 14ம் தேதி சவரன் ரூ.53,200 என விலை குறைந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது.  இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.440 எகிறியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Savaran ,Dinakaran ,
× RELATED கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை...