×

ஜோடி இங்ேக... தாய், தந்தையர் அங்கே... பெற்றோராக இருந்து போலீசார் ‘டும்டும்’

புனே: பெற்றோர் உத்தரகாண்டில் சிக்கிய நிலையில் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இளம்ஜோடிக்கு மகாராஷ்டிராவில் போலீசார் திருமணம்  செய்து வைத்தனர்.
ஆதித்யா சிங்(27) என்ற ஐடி ஊழியருக்கும், டாக்டராக இருக்கும் இளம் பெண்ணுக்கும் பெற்றோர் திருமணத்தை நிச்சயித்து இருந்தனர். மே 2ம் தேதி  உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இருவரது தந்தையும் ராணுவத்தில் கர்னலாக இருந்து  ஓய்வு பெற்றவர்கள்.  இந்நிலையில் கடந்த மார்ச் கடைசி வாரம் தொடங்கி ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல்  உருவானது.

ஆனால் மணமகன், மணமகளின் குடும்பத்தினர் இது குறித்து செல்போனில் பேசினார்கள். பின்னர் இருவரும் தங்கி பணி செய்து வரும் மகாராஷ்டிரா  மாநிலம் புனேவிலேயே இளம்ஜோடிக்கு குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை முடித்து வைப்பதற்கு முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து புனே காவல் நிலையத்தை பெற்றோர் தொடர்புக் கொண்டு தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கும்படி  வேண்டுகோள் விடுத்தனர். பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டு மணி நேரத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர்.

அமனோராவில் உள்ள ஒரு கிளப்பில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. புனே காவல்துறை துணை ஆணையர் சுகார் பவாசே  முன்னிலையில் ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் பங்கேற்க திருமணம் நடந்தது. உதவி ஆய்வாளர் படில் மற்றும் அவரது மனைவி பெற்றோராக  இருந்து கன்னிகாதானம் செய்து வைத்தனர். மணமகனின் சகோதரரான அம்பாலா ராணுவ மேஜர் மற்றும் மணமகளின் சகோதரி நேபாளத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக  திருமணத்தை கண்டு மகிழ்ந்தனர்.
திருமணத்திற்கு பின் பேசிய ஆதித்யா சிங் கூறுகையில், ‘‘எங்களது பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்தது.  ஆனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது” என்றார்.



Tags : Jodi ,parents , Parents, Uttarakhand, Corona, Curfew
× RELATED பராக் – சாம்சன் ஜோடி அமர்க்களம்: ராஜஸ்தான் 196 ரன் குவிப்பு