×

ஆலப்பாக்கம் ஊராட்சியில் 5000 குடும்பத்துக்கு அரிசி காய்கறிகள்: கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு:  காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி முன்னாள் அதிமுக தலைவர் கே. சல்குரு ஏற்பாட்டில்  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஊராட்சி பொதுமக்களுக்கு அரசி காய்கறி வழங்கும் நிகழ்ச்சி வேம்பாக்கம் அரசு ஐ.டி.ஐ.அருகில் நேற்று நடைபெற்றது.  இதில் செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் கலந்துகொண்டு ஆலப்பாக்கம் ஊராட்சியைச்சேர்ந்த இருங்குன்றப்பள்ளி, வேதநாராயணபுரம், கே.கே.நகர்,  பெத்தேல்நகர், பகுதிகளைச்சேர்ந்தவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், ஊர்காவல்படையினர் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 5ஆயிரம் குடும்பத்திற்கு  தலா 5கிலோ அரசி,
5கிலோ காய்கறிக்ள வழங்கினார்.

 பொதுமக்கள் சமூக இடை வெளியுடன் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில்  மாவட்ட திட்ட இயக்குனர் தர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றியசெயலாளர் கொளஸ்பாஷா, ஊராட்சி  துனைத்தலைவர் உமாபதி, ஊராட்சி செயலர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், வழக்கறிஞர் பெருமாள் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

Tags : families ,Collector ,Alappakkam Parachchi , Alappakkam Panchayat, Rice, Vegetables, Collector, Corona, Curfew
× RELATED கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..!!