×

வக்கீல் தற்கொலை

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி காலனி வேட்டைக்காரன் தெருவை சேர்ந்தவர் அருள் (50). பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர். இவர், நேற்று வீட்டின் பின்புறம் உள்ள தைலமர தோப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள், அவரது சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அருள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : lawyer , The lawyer , suicidal
× RELATED பெண் வக்கீல் முகத்தில் எச்சில்...