×

அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால் பழுத்து வீணாகிய முலாம்பழங்கள்: குவியலாக கொட்டி கிடக்கும் அவலம்

தர்மபுரி: தர்மபுரி அருகே ஊரடங்கு எதிரொலியாக முலாம்பழம் அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால் தோட்டத்திலேயே பழுத்து வீணாகியது. தர்மபுரி மாவட்டத்தில் 100 ஏக்கரில் முலாம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் முலாம்பழம் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கினர். விளைபொருட்கள் அறுவடைக்கு சரியான நேரத்தில் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் முலாம்பழம் தோட்டத்திலேயே பழுத்து அழுகிய நிலையில் உள்ளது. மொரப்பூர் அருகே விவசாயி இளங்கோ அரை ஏக்கரில் முலாம்பழம் சாகுபடி செய்திருந்தார்.

தற்போது அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால், முலாம்பழம் தோட்டத்திலேயே பழுத்தது. குடும்பத்தினரே அவசரமாக அறுவடை செய்து கடைகளுக்கு கொண்டு வந்தால், அங்கு பழக்கடைகள் இல்லை. வாங்குவதற்கு வியாபாரிகளும் முன்வரவில்லை. இதனால் கவலை அடைந்த விவசாயி ஒரு இடத்தில் குவியலாக கொட்டி வைத்திருந்தார். அடிக்கும் கோடை அனல் காற்றில் அனைத்துமே அழுகியது. இதனால் அவருக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இதே நிலை தான் பல விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப விவசாயிகளுக்கு உதவி வேண்டும் என மாவட்ட நிர்வாக்தினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  



Tags : Ripe wasps, workers , unable , harvest
× RELATED ஓசி தக்காளி கேட்டு வியாபாரியை தாக்கிய பாஜ நிர்வாகி மீது வழக்கு