×

ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு: நாளை முதல் மதுபான ஆலை உற்பத்தி தொடங்க அனுமதி: ஆந்திர மாநில அரசு அறிவிப்பு

திருமலை: ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் நாளை முதல் மதுபான தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்க ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது.  இந்நிலையில் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தளர்வு வழங்கி உள்ளது.

நாளை 4ம் தேதி முதல் இந்த தளர்வு நடைமுறைக்கு வரக்கூடிய நிலையில் மாநில அரசு பீர் மற்றும் மதுபானங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்க அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கால் அரசின் வருவாய் முற்றிலும் முடங்கி உள்ளது.
இதனால் அரசுக்கு பிரதான வருவாயாக இருக்கக்கூடிய மது விற்பனை செய்வதன் மூலம் சற்று அரசின் வருவாயை ஈட்டி இழப்பை சரிசெய்ய செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மது விற்பனையை தொடங்க முடிவு செய்துள்ளது.

Tags : Orange ,Green Zones ,Andhra Pradesh Government , Orange, Green Zones, Curfew, Liquor Plant, Andhra Pradesh Government
× RELATED தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான...