×

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை ஷேர் செய்தால் 500 ரூபாய் நிவாரண நிதிக்கு போகும்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஹம் ஹார் நகஹி  மானேகே’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது கொரோனா வைரசுக்கு எதிராக போராடுகிற மக்கள் பற்றியும் மருத்துவ பணியாளர்கள் பற்றியுமான பாடல். இதற்கு இசை அமைத்து பாடி இருக்கிறார் ரஹ்மான். அவரடன் அவரது மகள் கதிஜா, ஸ்ருதி ஹாசன், சித் ராம், நீதி மோகன், ஜாவேத் அலி, சாஷா திருபாதி, அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர். இந்த பாடலை தனியார் வங்கி ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு  செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடல் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது, அது இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்”   என்கிறார் ரஹ்மான்.


Tags : RR Rahman , A. R. Rahman Song, Corona, Curfew, Relief Fund
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...