×

நெதர்லாந்தில் சிக்கிக் கொண்ட விஜயகாந்த் மகன்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்தின் 2வது மகன் சண்முகபாண்டியன். சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மதுரைவீரன் படத்தில் நடித்தார். அடுத்து ‘மித்ரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சண்முக பாண்டியன், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக முறையான பயிற்சி பெற நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றார். அவர் நாடு திரும்ப உத்தேசித்திருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது சண்முக பாண்டியன் நெதர்லாந்தில் உள்ள சுமோ ஆம்ஸ்டாம் நகரில் தனிமையில் இருக்கிறார்.

“சண்முக பாண்டியன் நெதர்லாந்து நாட்டில் மாட்டிக் கொண்டாலும், அங்கு அவர் தனிமையில் இருந்தாலும் நலமாக இருக்கிறார். தினமும் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கிறார். கொரோனா பிரச்னைகள் முடிந்ததும் நாடு திரும்பி மித்ரன் படத்தில் நடிக்க இருக்கிறார். என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tags : Netherlands ,Vijayakanth , Vijayakanth son of Corona, Curfew, Netherlands
× RELATED தாயின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற மகன் ராஜபாளையத்தில் பயங்கரம்