×

ஜன்தன் வங்கி கணக்கில் 2வது கட்டமாக 500: நாளை முதல் பெறலாம்

புதுடெல்லி: கொரோனா பரவுவதை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏழை பெண்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் 26ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி `ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள ஏழை பெண்களுக்கு ஏப்ரல் தொடங்கி 3 மாதங்களுக்கு கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த மாதம் 20.05 கோடி பெண்கள் தலா ரூ.500ஐ முதல் தவணையாக பெற்றனர். இவ்வாறு மொத்தம் ரூ.10,025 கோடி பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் 2வது தவணை நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர் தேபஷிஷ் பாண்டா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: பிரதான் மந்திரி ஜன்தன் ேயாஜனா திட்டத்தின் கீழ் மே மாதத்துக்கான தவணையாக தலா 500, மே 4 முதல் செலுத்தப்படுகிறது.  வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த தொகை 5 நாட்களாக பிரித்து வழங்கப்படுகிறது. அதன்படி 0 அல்லது 1ல் முடியும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு நாளையும், 2 அல்லது 3 என்ற எண்ணில் முடியும் கணக்கு எண் உள்ளவர்கள் ேம 5ம் ேததியும், மே 6ம் தேதி பணம் பெறுபவர்களது கணக்கு எண் 4 அல்லது 5 என்ற எண்ணில் முடியும்.

6 அல்லது 7 என்ற எண்ணில் முடியும் கணக்கு எண் வைத்துள்ளவர்கள் 8ம் தேதியும்,  8 அல்லது 9 என்ற எண்ணில் முடியும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வரும் 11ம் தேதியும் தலா 500 வழங்கப்படும். வங்கி கிளைகள் மட்டுமின்றி ஏடிஎம்கள், பேங்க் மித்ரா மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் சென்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.



Tags : phase ,Jannan , Janathan Bank Account, Corona, Curfew
× RELATED 2 கட்ட தேர்தல் முடிந்தும்...