×

கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி, மாநிலம் விட்டு மாநிலம் பயணம் : 18 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்

போபால்: கான்கிரீட் கலவை வாகனத்தில் பதுங்கி, மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல முயன்ற 18 பேரை மத்திய பிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளிமாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதற்கிடையே, வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, மாநில அரசுகளின் முயற்சியில் ரயில்களில் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இருந்து உ.பி., மாநிலம் லக்னோவுக்கு செல்ல முயன்ற 18 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தை மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கலவை இயந்திரத்தின் உள்ளே 18 பேர் பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ந்தனர். இதனால், 18 பேரையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்களை சட்ட விரோதமாக அழைத்து வந்த வாகனத்தின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : policemen ,state , Concrete, mixer, vehicle, engine, ambush, travel, police, Uttar Pradesh, Maharashtra
× RELATED தேர்தல் பணிக்கு சென்றபோது 3 போலீசார்...