×

இயக்குனர் மர்ம சாவு: கொரோனா பரிசோதனை நடத்த முடிவு: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

அழைப்பிதழ், கேடயம் படங்களை இயக்கியவர் ராஜு மோகன். 47 வயதான ராஜு மோகனின் சொந்த ஊர் கோவை. இன்னும் திருமணம் ஆகவில்லை. சினிமா ஆசையில் சென்னை வந்தவர் 2 படங்களை இயக்கி விட்டு 3வது படத்திற்காக கே.கே.நகர் கிழக்கு வண்ணியர் தெருவில் அலுவலம் நடத்தி வந்தார். கொரோன ஊரடங்கு காலம் என்பதால் அலுவலத்திலேயே தனிமையில் தங்கி இருந்த அவர் காலை, இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு மதிய உனவுக்கு மட்டும் நண்பர்கள் இருக்கும் அறைக்கு சென்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் மதிய உணவுக்கு வராததால் அவருக்கு உணவு எடுத்துக் கொண்டு அவரது அலுவலம் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து திறந்தபோது அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கே.கே.நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது நண்பரும் இயக்குனருமான கீரா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் ராஜு மோகனுக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். ராஜிவ் காந்தி மருத்துவமனை கொரோனா பரிசோதனைக்காக  ராஜு  மோகன் உடல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோவையில் உள்ள உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர்.

Tags : Director Mystery Death ,Relatives ,Test ,Corona , Director, Sau, Corona, Curfew
× RELATED போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தால்...