×

அல்லு அர்ஜுன் படத்திலிருந்து வெளிநாட்டு டெக்னீஷியன்கள் நீக்கம்

கொரோனா எதிரொலியால் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்திலிருந்து வெளிநாட்டு டெக்னீஷியன்கள் நீக்கப்பட்டுள்ளனர். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிக்கும் படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படம் உருவாக உள்ளது. சுகுமார் இயக்க உள்ளார். இந்த படத்தில் குறிப்பிட்ட ஒரு சண்டை காட்சியை காட்டு பகுதியில் படமாக்க முடிவு செய்தனர். இதில் நடிக்க வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களுடன் இந்த காட்சியை படமாக்க சில வெளிநாட்டு டெக்னீஷியன்களையும் பட நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இப்போது கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு நிலவுகிறது. அது முடிந்து ஷூட்டிங் தொடங்கினாலும் வெளிநாட்டு டெக்னீஷியன்கள் இங்கு வருவதில் விசா பிரச்சனை ஏற்படும் என்பதாலும் வேலை இழந்துள்ள நமது டெக்னீஷியன்களுக்கு வேலை தர வேண்டும் என்பதாலும் இந்த படத்திலிருந்து வெளிநாட்டு டெக்னீஷியன்கள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Removal ,technicians ,Allu Arjun ,Foreign Technicians of Removal , Removal , foreign technicians , Allu Arjun
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...