×

96 வயதில் 98 மதிப்பெண்கள் பெற்றவர்; முதல்வர் நிவாரண நிதிக்கு 2 மாத ஓய்வூதியம்: கருணை உள்ளமே கடவுள் இல்லமே

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மா(98). இளமையில் வறுமை காரணமாக இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லாதவர்களுக்கு எழுத்தறிவு திட்டத்தை ேகரள அரசு ெகாண்டு வந்தது. இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 96 வயதில் கார்த்தியாயினி அம்மா சேர்ந்து படித்தார். அதில் நடந்த தேர்வில் கார்த்தியாயினி அம்மா 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதையடுத்து கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத், கார்த்தியாயினி அம்மா வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி கவுரவித்தார். ேமலும் கேரள எழுத்தறிவு திட்டத்தின் நல்லெண்ண தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டார். ேமலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசும் சிறந்த பெண்மணிக்கான ‘நாரிசக்தி’ விருதை கார்த்தியாயினி அம்மாவுக்கு வழங்கியது. ெடல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார். இந்த நிலையில் தனக்கு கிடைக்கும் 2 மாத முதியோர் ஓய்வூதியத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக கார்த்தியாயினி அம்மா அறிவித்தார்.

இதையடுத்து கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் மொய்தீன், கார்த்தியாயினி அம்மா வீட்டுக்கு சென்று, 2 மாத ஓய்வூதியமான ரூ.3,000ஐ பெற்றுக்கொண்டார். இந்த செயல் அனைவருக்கும் ஊக்கமாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags : CM ,God , CM Relief Fund, Pension
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...