×

மளிகை கடைக்கு போன வாலிபர் அம்மாவுக்கு வாங்கி வந்தது மருமகள்: செல்லாது... செல்லாது என்று போலீசில் புகார்

காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மளிகை கடைக்கு சென்ற வாலிபர் தான் காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், சாகிபாபாத்தை சேர்ந்தவர் குட்டூ(26). வீட்டில் மளிகைப் பொருட்கள் இல்லாததால் நேற்று அவரது தாய் கடைக்கு சென்று வரும்படி கூறினார். இதனையடுத்து வீடு திரும்பிய அவர், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை உடன் அழைத்து வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க சென்ற மகன் இளம்பெண்ணோடு திரும்பி வந்ததால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் காவல்நிலையத்திற்கு சென்று கண்ணீரோடு முறையிட்டார். இதனை தொடர்ந்து குட்டூ மற்றும் அவர் அழைத்து வந்த இளம்பெண் சவிதாவை அழைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் 2 மாதங்களுக்கு முன் ஹரித்துவாரில் உள்ள ஆரிய சமாஜத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் ஊரடங்கு காரணமாக அவர்களது திருமண சான்றிதழை பெற முடியவில்லை. டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சவிதா ஊரடங்கு காரணமாக அங்கிருந்து காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னை அழைத்து சென்றுவிடும்படி குட்டூவிடம் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் மளிகை கடைக்கு சென்ற குட்டூ, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுமார் 20 கி.மீ. தொலைவில் சவிதா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்துள்ளார். ஆனால் இருவரையும் ஏற்றுக்கொள்ள குட்டூவின் தாயார் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து தம்பதியர் டெல்லியிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



Tags : grocery store ,mother-in-law , Grocery store, plaintiff, mother, corona, curfew
× RELATED வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை...