×

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு: 2014-ம் ஆண்டு விண்ணப்பித்த நிலையில் தற்போது அறிவிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி என்ற உடன் தமிழகத்தில் பெரும்லானோருக்கு சட்டென்று நினைவில் வருவது கடலை மிட்டாய் தான். கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக்கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் ஆகும். ஏழைகளின் பண்டம் என்றழைக்கப்படும் கடலைமிட்டாய் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான்.

இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்று நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். புவிசார் குறியீடு கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. பழநி பஞ்சாமிர்தத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kovilpatti ,Announcement , Kovilpatti, sea candy, geographical code
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!