×

ஊரடங்கால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.3,240 கோடி வருவாய் இழப்பு; மதுப்பிரியர்களை மகிழ்விக்க கள்ளத்தனமாக ரூ.500 கோடிக்கு மதுபானம் விற்பனை

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் வரும் 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத காரணத்தினால், ஊரடங்கை நீட்டிக்க பிரதமர்  மோடியிடம் 10-க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். ஆனாலும், மீண்டும் நாடு  முழுவதும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியவாசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளையும் தமிழக அரசு கடைக்க உத்தவிட்டது. இதில், தமிழக அரசின் சுரங்கம் என்று அழைக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்கும்  பொருந்தும். மதுபானம் இல்லாததால் தினமும் குடிக்கும் குடிமகன்கள் என்ன செய்த தெரியாமல் கள்ளச்சாரயம் காய்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாரம் காய்பவர்களை காவல்துறை கைது செய்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக ரூ.500 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளத்தனமாக விற்பனை செய்த பணத்தை வங்ககளில் கட்டாமல் ஊழியர்கள்  கையில் வைத்திருப்பதாகவும், பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த ஊழியர்களை அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. கடை திறந்ததும் விற்பனையானது போன்று கணக்குக்காட்ட திட்டமிட்டுள்ளதாகவும், கள்ளதனமாக  மதுபானங்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் துணைப் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது, நிரூபணமாகும் வகையில், ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளை மார்ச் 24-ம் மூடியபோது 12 நாட்களுக்கான மதுபானம் இருந்ததாகவும், கள்ளத்தன மதுபானம் விற்பனையால் பல கடைகளில் மதுபானங்கள் முழுமையாக தீர்ந்துவிட்டதாக  தகவல் தெரிவிக்கப்படுகிறது. இருப்பு தீர்ந்த கடைகளில் சோதனை நடத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, ஆய்வில் இருப்பு குறைவு கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், இதனால், ரூ.123 கோடி அசல் அபராதம் வசூல்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் திருட்டு, கொள்ளை புகாரையடுத்து இதுவரை 1,500 கடைகளில் இருப்பு சோதனை நடத்தியுள்ளதாகவும், எஞ்சிய 3,700 கடைகளின் மதுபானங்கள் இருப்பையும் ஆய்வு செய்ய  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுபான விற்பனைக்கான வாட் வரியை வங்கியில் கடன் வாங்கி தமிழக அரசுக்கு டாஸ்மாக் செலுத்தியுள்ளது. மதுபானம் விற்பனை மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.90 கோடி வருமானம் கிடைக்கும்.  ஊரடங்கால் மதுபானம் விற்பனை முடங்கிவிட்டதால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.3,240 கோடி வருவாய் இழந்துள்ளது. இதனால், தமிழக அரசுக்கு வாட் வரியை செலுத்த இந்தியன் வங்கியிடம்  டாஸ்மாக் ரூ.1050 கோடி கடன்பெற்றுள்ளது.

டாஸ்மாக் மதுபானத்துடன் 1,055 லாரிகள் 36 நாட்களாக காத்துக் கிடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கிடங்குகளில் மதுபானங்கள் இறக்கபடாததால் உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கிடங்கில் இடம்  இருந்தும் ஊரடங்கை காரணம் காட்டி மதுபானங்களை இறக்க மறுப்பதாக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் லாரிகளில் இருந்து மதுபானம் கொள்ளை போவதால் ஓட்டுநர், உதவியாளர்கள் தவித்து வருவதாகவும்,  36 நாட்களாக ஒரே  இடத்தில் லாரிகள் நிற்பதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் ஓட்டுனர்கள் பட்டினி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.



Tags : curfew task force ,liquor lovers , Rs 3,240 crore revenue loss for curfew task force; Rs. 500 crores of liquor sold to counter liquor lovers
× RELATED தளர்வில்லா ஊரடங்கு எதிரொலி: தமிழகம்...