×

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கில் நகரும் என தெரிவித்துள்ளது. வடகிழக்கில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகரும் என கூறியுள்ளது.     



Tags : Indian Meteorological Department ,Andaman Sea ,Southern Andaman Sea , New wind , form, southern Andaman Sea, Indian Meteorological Department
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்