×

வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்

நாமக்கல், ஏப்.24: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில், நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 24ம் தேதி(இன்று) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,Collector ,Uma ,Tamil Nadu ,Indian Meteorological Department ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...