×

கிருஷ்ணகிரி டாக்டருக்கு கொரோனா பாதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர், ராயக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது கணவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர், கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரிக்கு வந்து, வீட்டில் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் விழுப்புரம் திரும்பியுள்ளார்.
விழுப்புரத்தில் அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. கிருஷ்ணகிரியில் உள்ள அவரது மனைவி, தந்தை, அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 9 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது, கிருஷ்ணகிரி வந்து சென்ற  டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.



Tags : doctor ,Krishnagiri , Krishnagiri, Doctor, Corona
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...