×

கொரோனா பற்றி டிவிட்டரில் கேள்வி அந்தமான் யூனியன் பிரதேச பத்திரிகையாளர் கைது

புதுடெல்லி: கொரோனா பற்றி டிவிட்டரில் கேள்வி எழுப்பிய அந்தமான் யூனியன் பிரதேச பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தமான் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூபைர் அகமது. இவர் அந்தமான் கிரானிக்கல் என்ற பத்திரிகையின் முன்னாள் செய்தியாசிரியராக பணியாற்றியவர். தற்போது பிரிலான்சராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில் `கொரோனா பாதித்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தனக்கு அறிமுகமான நபர்களை போனில் தொடர்புக் கொள்ள முடிவதில்லை. அவ்வாறு பேசும் நபர்களை போனில் வந்த அழைப்புகள் அடிப்படையில் பிடித்து தனிமைப்படுத்துகின்றனர்’ என தெரிவித்திருந்தார்.

மற்றொரு டிவீட்டில் `கொரோனா நோயாளிகளிடம் போனில் பேசும், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்திவைப்பது ஏன் என்பது குறித்து யாராவது விளக்கம் அளிக்க முடியுமா’ என கேட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு பத்திரிகையாளர் அகமதுக்கு சம்மன் அனுப்பினார். இதை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் பத்திரிகையாளர் அகமது போலீசாரால் கைது செய்யப்பட்டார். தவறான எச்சரிக்கை விடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   



Tags : journalist ,Corona ,Andaman Union Territory , Corona, Union Territory, journalist, arrested
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...