×

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வர தடை; மலர் மற்றும் பழச்சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம்: சிஎம்டிஏ உறுப்பினர் கார்த்திக்கேயன்

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுகிறது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் இயங்கி வந்த பூ மற்றும் பழக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படுகிறது எனவும் கூறினார். சென்னை கோயம்பேடு சந்தையில் இதுவரை 3 நபருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தீவிரம் மேலும் அதிகரிப்பதால் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு மொத்த வியாபாரிகள் என சந்தையை இரண்டாக பிரித்து இடமாற்றம் செய்ய அரசு முடிவெடுத்தது.

வேளாண்துறை முதன்மை செயலாளர், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் இடையே நேற்றைய தினம் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதன் காரணமாக இன்று காலை மீண்டும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் கோயம்பேடு சந்தையில் இயங்கி வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு மொத்த வியாபாரிகள் கடைகளை இரண்டாகப் பிரித்து இயக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் கூறியதாவது;

* ஏப்ரல் 30 ம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை  தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* காய்கறி கடைகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் செயல்படும். கோயம்பேடு சந்தை மொத்த சில்லறை வியாபாரம் மட்டுமே நடைபெறும்.

* காய்கறி, உணவு தானியங்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* மொத்த வியாபாரிகளுக்கு கோயம்பேட்டிலும் மற்றும் மீதமுள்ள சிறு மொத்த வியாபாரிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், மைதானங்களில் விற்பனை செய்யலாம்.

* அதிகாலை முதல் 7.30 மணி வரை வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

* காய்கறி அங்காடிக்கு நிர்ணயிணைக்கப்பட்டுள்ள கால அட்டவணை கோயம்பேடு உணவு தானிய அங்காடிக்கும் பொருந்தும்.

Tags : Karthikeyan ,Coimbatore ,CMTA ,Coimbatore Vegetable Market on Public Bans , Coimbatore, Vegetable Market, Prohibition, Flower, Fruit Market, CMDA, Karthikeyan
× RELATED வெப்ப அலை வீசுவதால் வெடிமருந்து...