×

குடியிருப்பில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் வெளியாரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே கருவேல மரத்தின் கீழே சுமார் 10 அடி நீளமுள்ள வெங்கனத்தி இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு நேற்று கிடந்தது.


பின்னர் நேரம் ஆக ஆக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. மலைப்பாம்பை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்புத்தூர் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை திருப்புத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை மதகுபட்டி அருகில் உள்ள மண்மலை வனப்பகுதியில் உயிருடன் பத்திரமாக விட்டனர்.



Tags : apartment ,Feet Python ,Thirupathur Residential Area ,Forest Authorities , Python ,Thirupathur ,Residential Area,Forest Authorities
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...