×

வேலூரில் மக்கள் இரவில் தவிப்பு பூனைகள் சண்டையால் 6 மணி நேரம் மின்தடை

வேலூர்: வேலூர் துணை மின் நிலையமான சேண்பாக்கத்தில் இருந்து கொணவட்டம், சார்பனாமேடு, தொரப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் துணை மின்நிலையத்தில் 2 பூனைகள் சண்டையிட்டுள்ளது. அப்போது அவை அங்குள்ள பிரேக்கர்கள் மீது விழுந்தது. இதனால் பிரேக்கர் பீடர்கள் திடீரென வெடித்தது. இதில் ஒரு பூனை இறந்தது. இதனால் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதுமாக மின் தடை ஏற்பட்டது.

பொறியாளர் குழுவினர் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்குள் மின்சப்ளை வழங்கப்பட்டது. சேண்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணியளவில்தான் மின்சாரம் வந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகே மின்வினியோகம் சீரானது. பூனைகள் சண்டையால் 6 மணிநேரம் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட புழுக்கத்தில் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாயினர்.


Tags : Residents ,Vellore , Residents ,Vellore overnight, 6 hours, night fighting of cats
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...