×

உத்தரப்பிரதேச மருத்துவக்கல்லூரிகளுக்கு தரம்குறைந்த பிபிஇ உடைகள் சப்ளை செய்தவர்களை தண்டிக்க வேண்டும்: பிரியங்கா காந்தி கோரிக்கை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச பொது மருத்துவ கல்வி இயக்குனர் எழுதிய கொரோனா தடுப்பு நடவடிக்கை கடிதத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இந்தியில் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேச மருத்துவக் கல்லூரிகளுக்கு தரம் குறைந்த தனிநபர் பாதுகாப்பு உடைகள் (பிபிஇ) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உடைகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தரம் குறைந்த உடைகள் என்பது கண்டறியப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பல டாக்டர்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

 ஆனால் உத்தரப் பிரதேச அரசு இந்த ஊழல் தொடர்பாக கவலை கொள்ளவில்லை. ஆனால் இதுகுறித்த தகவல் எப்படி கசிந்தது என்பது பற்றி தான் மாநில அரசு கவலை அடைந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Priyanka Gandhi ,wear suppliers ,PPE ,schools ,Uttar Pradesh , Uttar Pradesh, Medical College, Priyanka Gandhi
× RELATED குழந்தை மாதிரி மோடி அழுகிறார்: பிரியங்காகாந்தி சாடல்