×

கொரோனா அபாயத்திலும் விடாத மோகம்; அட்சய திருதியை தினத்தில் சாலையோரம் தங்கம் விற்பனை: ஈரோடு அருகே பரபரப்பு

பெருந்துறை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று அட்சய திருதியை நாளாகும். அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதும், வாழ்வு வளம் பெறும் என்பதும் மக்களிடம் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இத்தினத்தன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியான நகைக்கடை உரிமையாளர்கள் அட்சய திருதியை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளருக்கு போன் மூலம் தங்கம் தேவை இருக்கிறதா என நேற்று முன்தினமே கேட்டறிந்து பின்னர் அதனை அட்சய திருதியை நாளான நேற்று காலை நகை முன்பதிவு செய்தவரின் வீட்டருகே சென்று சாலையோரம் நின்று தங்கம் விற்பனையில் ஈடுபட்டனர்.

இந்த வகையில், பெருந்துறை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் தங்க நகை கடை உரிமையாளர் நகையை கொடுத்து அந்த இடத்திலேயே பணத்தை பெற்றுக் கொண்டார்். அப்போது கணவன் மனைவி இருவரும் செருப்பை கழட்டி விட்டு பவ்யமாக நகையை வாங்கியது அங்கிருந்த பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் வைரஸ் தொற்றும் அபாயத்தை மறந்து நகைக் கடை உரிமையாளர்கள் போனில் ஆர்டர் பெற்று சாலையோரம் தங்க நகை விற்பனையில் ஈடுபட்டது பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Corona ,Erode ,Etsy Thiruthirai , Corona, roadside, gold sale
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது