×

கொரோனா பிடியில் இருந்து மெல்ல மீளும் நியூஸிலாந்து..! ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் : பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன் : கொரோனா பிடியில் இருந்து நியூஸிலாந்து மெல்ல மீண்டு வருவதாகவும் , பரவலை முற்றிலும் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். நாடு கொரோனா வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக முடிவு கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தற்போது நியூஸிலாந்தில் சமூக பரவல் இல்லை என்றும் நாடு கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட், இது குறித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாகவும் ,இது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறவில்லை ஆனால் தொற்று எங்கு இருக்கிறது என்பது ஒரு அளவிற்கு எங்களால் அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வாரங்கள் கடுமையான 4 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு இன்று நியூஸிலாந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வில் சில தொழில்கள் தொடர்ந்து நடக்கவும் , பள்ளிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான மக்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கவும் சமூக தொடர்புகளைத் தவிர்க்கவும் பிரதமர் ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

எல்லோரும் நாம் அனைவரும் தவறவிட்ட சமூக தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புகிறோம் என்று அவர் பிரதமர் ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார், ஆனால் அதை நம்பிக்கையுடன் செய்ய நாம் மெதுவாக செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Jacinda Ardern ,New Zealand ,Corona ,country ,battle , Coronavirus,Covid-19,New Zealand ,Jacinda Ardern
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...