×

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என 10 மாநில முதல்வர்கள் கோரிக்கை

டெல்லி: ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என 10 மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முதல்வர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளார். மே 3 ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மேகாலாயா முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளனர்.  ஊரடங்கை ஒரு மாதம் நீடிக்க வேண்டுமென ஒடிசா முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கும் என பிரதமர் கூறியதாக தகவல் தெரிவித்துள்ளனர். தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் இருக்கும் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : state chiefs , Curfew, 10 Chief Ministers, Corona
× RELATED ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்