×

கொடைக்கானலில் தூய்மைப்பணியில் ஈடுபடும் அமெரிக்க சுற்றுலாப்பயணி

கொடைக்கானல் : கொடைக்கானலில் அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் தூய்மைப்பணியில் ஈடுபடுவது பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் பவுல் (60). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சுற்றுலா விசாவில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வந்தார். பின், நகரில் பெருமாள் மலையில் உள்ள தியான மையத்தில் தங்கி தியானம் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் பவுல், அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை.

இதனால் தினமும் தியானம் முடிந்தவுடன் பெருமாள்மலை, உப்புப்பாறை, பேத்துப்பாறை மற்றும் ஏரிச்சாலை உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் குப்பைகளை பெருக்கி சேகரித்து, ஒரு பையில் போட்டு, குப்பைத்தொட்டியில் போட்டு வருகிறார். இவரது பணியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து பவுல் கூறியதாவது, ‘‘உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால், எனது சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. மன அழுத்தத்தை குறைக்கும் வகையில்,  குப்பைகளை அப்புறப்படுத்தி, தூய்மைப்பணியை செய்து வருகிறேன். இப்பணி எனக்கு மன அமைதியை தருகிறது. மேலும், நான் இருக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள இது பயிற்சியாக அமையும்’’ என்றார்.

Tags : tourist ,American ,Kodaikanal ,Foreigner ,Him , Kodaikanal,Foreigner ,Cleaning ,Appreciated
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...