×

போர்ட்டில் எழுதி வைத்து கோரிக்கை 93 வயசு பாட்டிக்கு நெறைய பீர் வேணுமாம்...: ஒன்லி ‘கூர்ஸ் லைட்’ தான் அடிப்பாராம்

வாஷிங்டன்: ஊரடங்கால் வீட்டில் அடைபட்டு கிடைக்கும் 93 வயது பாட்டி ஒருவர் தனக்கு அதிகளவில் பீர் தேவை என்று, போர்டில் எழுதிவைத்து உணவுப்பொருட்களை விநியோகிப்பவர்களிடம் காட்டி வருவது, சமூக இணையதளங்களில் வைரலாகி உள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவை தவிர்த்து அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. அமெரிக்காவில் கொரோனா கொடிய முகத்தை காட்டி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், அங்கும் ஊரடங்கு நீடிப்பதால் பலர் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுபோன்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் வீடு தேடிச்சென்று உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பென்சில்வேனியாவைச் சேர்ந்த 93 வயது பாட்டி ஒருவர், தனது வீட்டில் பீர் இல்லாமல் கடும் அவதி அடைந்துள்ளார். தொடர்ந்து பீர் அடித்து பழக்கப்பட்ட பாட்டிக்கு, இந்த ஊரடங்கு காலத்தில் பீர் கிடைக்காதது அவருக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.இதனால் ஒரு அட்டையில், ‘‘எனக்கு அதி்களவில் பீர் தேவை’’ என்று எழுதி, அதை தனது வீட்டு கண்ணாடி வழியாக போவோர், வருவோரிடம் காட்டி வருகிறார். மேலும், தனக்கு ‘கூர்ஸ் லைட்’ பிராண்டை சேர்ந்த டின் பீர்தான் தேவை என்பதை உணர்த்துவதற்காக அதையும் கையில் வைத்துக் கொண்டு காட்டி வருகிறார்.இதை படம் பிடித்த ஒருவர், உள்ளூர் டிவி சேனலின் சமூக இணையதளத்தில் பதிவிட, அது இப்போது அமெரிக்காவில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 10 லட்சம் பேர் பாட்டிக்கு லைக் போட்டுள்ளனர். பாட்டிக்கு பீர் கிடைத்ததா என்றெல்லாம் கேட்கப்படாது... அதற்கு இப்போதைக்கு பதில் கிடைக்கவில்லை.


Tags : board , 93-year-old ,grandmother needs, beer to write, board ...
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...