ஓமலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைத்தறி பட்டு உற்பத்தி முடக்கம் ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

* நிவாரணம் வழங்க அரசுக்கு  கோரிக்கை

* மின் கட்டணம் ரத்து செய்ய வலியுறுத்தல்

ஓமலூர்: சேலத்தை அடுத்த ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் கைத்தறி சுத்தப்பட்டு சேலை உற்பத்தி தொழில் முடங்கி, ₹ 300 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்கட்டணத்தை ரத்து செய்து,  நிவாரணம் வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி,சிந்தாமணியூர், செம்மாண்டப்பட்டி,தொளசம்பட்டி,நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் கைத்தறி நெசவு கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு தறிக்கும் ஒருவர் வீதம் சுமார் 20 ஆயிரம் நெசவாளர்களும், அதனை சார்ந்த தொழிலில் சுமார் பத்தாயிரம் பேரும் என சுமார் 30 ஆயிரம் பேர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும்,இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு சேலைகளேதமிழகம் முழுவதும் செல்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சுத்தப்பட்டு சேலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கால்அப்பகுதியிலுள்ள 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றிநூற்றுக்கும் மேற்பட்டமொத்த பட்டு விற்பனை நிறுவனத்தினர், பட்டு சேலைகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஏற்கனவே உற்பத்தி செய்து கைவசமுள்ள பட்டு சேலைகளையும் விற்பனை செய்யமுடியாமல் தேக்கி வைத்துள்ளனர். இதனால், சுமார் 30 ஆயிரம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர்.அதேபோன்று இதனை சார்ந்துள்ளபாலீஷ், புட்டாஸ் கட்டிங், சாயம், டையிங், ரீலிங், வைண்டிங் என18வகை தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலரும் வேலையின்tறி, வறுமையால் வாடுகின்றனர். சில நிறுவனங்கள், தங்கள் நெசவாளர்களுக்கு நிவாரணமாகஅரிசி, மளிகை பொருட்களை, இலவசமாக வழங்கி வருகின்றன. ஆனால், இந்த கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் எப்போதுமே சமூக இடைவெளியுடன் நடைபெறும் தொழில் ஆகும். மேலும், பட்டு பாவு கோர்த்தல், நூல் சுத்துதல் என்று வேலையில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே ஈடுபடுவர். அதேபோன்று இந்த வேலையில் அந்தந்த ஊரை சேர்ந்த உள்ளூர் நபர்கள் மட்டுமே ஈடுபடுவர். அதனால், எந்த வகையிலும் சமூக இடைவெளி மீறப்படாது. அதனால், கைத்தறி நெசவு மற்றும் விசைத்தறி நெசவு தொழிலை துவங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த ஒரு மாதமாக தறிகள் அனைத்தும், அதை சார்ந்த தொழிலும் நடைபெறாத நிலையில் கடந்த மாத மின் கட்டணத்தை கட்ட வேண்டும் என்றால் முடியாத காரியம் ஆகும். அதனால், ஊரடங்கு காலத்தில் தறிகள் ஓடாததால் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பஞ்சுகாளிப்பட்டி, பட்டு சேலை உற்பத்தியாளர் அண்ணாதுரை கூறுகையில், ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபார நிறுவனங்கள் உள்ளது. ஏற்கனவே, வெளிநாடு, மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட ஜவுளிக்குரிய பணம், ஊரடங்கால் வரவில்லை. உள்ளூரிலும் விற்பனை இல்லாததால், தயாரிப்பு பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு காலத்தில் மட்டும், ₹ 300கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பட்டு நிறுவனங்கள் மீண்டு வரகுறைந்தது ஒரு ஆண்டுக்கு மேலாகும்,’’ என்றனர்.

Related Stories: