×

வீட்டிலேயே பாதிப்பை கண்டறிய அமெரிக்காவில் கிட் தயாரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வீட்டிலேயே கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கான கோவிட் 19 சோதனை கிட்டுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவது அதிகரித்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் கொரோனா உயிரிழப்புக்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வீடுகளிலேயே கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்வதற்கான கோவிட் 19 கிட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.  லேப்கார்ப் என்ற அமெரிக்க மருந்து நிறுவனமானது இந்த கோவிட் 19 சோதனை கிட்டை உருவாக்கி உள்ளது. இதன் விலை 119 அமெரிக்க டாலராகும் (ரூ.9 ஆயிரத்து 44)
இது தொடர்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் எம் ஹான் கூறுகையில், “குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில்  மருத்துவர்களின் மேற்பார்வையில் இந்த சோதனை செய்யப்படும்.

இதுகுறித்து நோயாளிக்கு தகவல் அனுப்பப்படும். பின்னர் அவர் கோவிட் 19 கிட்டில் உள்ள கருவி மூலமாக சுய பரிசோதனை செய்து மருத்துவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். உரிமம் பெற்ற மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் சோதனை முடிவுகளை பெறலாம்” என்றார். கோவிட் 19 கிட்டுக்கான வினாக்கள் தயாரித்து முடிக்கப்பட்ட பின், சுகாதார வல்லுநர்களால் பரித்துரைக்கப்பட்டால் பரிசோதனை மாதிரிகளை வீடுகளிலேயே சேகரிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என லேப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : US ,home ,impact home , Corona, USA
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்