×

மாஸ்க் அணியாததால் அபராதம் தட்டிக்கேட்ட வியாபாரி மூக்குடைப்பு: சுகாதார ஊழியர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டல சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா மற்றும் அவரது உதவியாளரும், தற்காலிக பணியாளருமான சரவணன் ஆகியோர் நேற்று முன்தினம் அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியில் உள்ள வணிக வளாகங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு துணிக்கடையில் 2 ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து, சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா, மேற்கண்ட கடைக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். அப்போது, அங்கு கடை உரிமையாளர் இல்லாததால், துணிக்கடை எதிரே அரிசி கடை நடத்தி வரும் லட்சுமணன் (48) அங்கு வந்து, அதிகாரி பாரதிராஜாவிடம், ‘கொரோனா தொற்றால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இதுபோல் அதிகளவில் அபராதம் விதித்தால், எப்படி செலுத்த முடியும். எனவே, அபராத தொகையை குறைத்து போடுங்கள்,’ என கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுகாதார ஊழியர் சரவணன் (40), அவரது மகன் பிரவீன் (20) ஆகியோர் சேர்ந்து வியாபாரி லட்சுமணனை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். இதில், லட்சுமணன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் இரு தரப்பின் புகார் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வியாபாரி லட்சுமணனை தாக்கிய மூக்கை உடைத்த சரவணனை நேற்று காலை கைது செய்தனர். மேலும், அவரது மகன் பிரவீனை தேடி வருகின்றனர்….

The post மாஸ்க் அணியாததால் அபராதம் தட்டிக்கேட்ட வியாபாரி மூக்குடைப்பு: சுகாதார ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambathur ,Ambathur Zone ,Health Inspector ,Bharatiraja ,Saravanan ,Dinakaran ,
× RELATED தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம்