×

இப்போம் எதுக்குப்பா மழை பெய்து: சென்னையில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை...கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்...!

சென்னை: சீனாவில் முதல் முறையாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க   வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக   நாடுகள் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 5,210 பேர் குணமடைந்த நிலையில், 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில் இன்று அதிகாலை முதல் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து  வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மயிலாபூர்,  மந்தைவெளி, அடையாறு, மத்திய கைலாஷ், திருவான்மியூர், கிண்டி, பெசன்ட் நகர், ஈக்காட்டுதாங்கல்,  வடபழனி, மூலக்கடை, வியாசர்பாடி, புளியந்தோப்பு,  புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

இருப்பினும், மழை காலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் என்று கூறப்படுவதால், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.  கோடையில் எப்போது மழை பெய்யும் என்று ஏங்கி இருக்கும் மக்கள் மத்தியில் தற்போது மழை எதற்கு தான் பெய்ததோ என்று நினைக்க வைத்துள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், சூரிய ஒளியின் வெப்பம்  மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று தெரிவித்தனர். சூரிய ஒளி 95 டிகிரி  பாரன்ஹீட் அல்லது 38 டிகிரி செல்சியஸ் இக்கும் போதும், 80 சதவீதம் அளவுக்கான ஈரப்பதமும் 18 மணிநேரம் என்ற  கொரோனாவின் ஆயுட்காலத்தை  பாதியாக குறைக்கிறது. சூரிய ஒளியில் உள்ள  ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும் என தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் கோடை  காலம் என்பதால் இந்தியாவிற்கு இது மிக சாதகமாக உள்ளதாக தெரிவித்தனர்.


Tags : thunderstorms ,Chennai , Thunderstorm: Heavy thunderstorms in Chennai early morning ..
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...