×

பெண் மருந்தாளுனருக்கு கொரோனா தொற்று: 3 காய்கறி மார்க்கெட் மூடல்

ஆவடி: ஆவடி, திருவள்ளுவர் நகர், துளசி தெருவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், இந்த பெண் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்காக ரத்த மாதிரியை கொடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, இந்த பெண் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இவர் வசிக்கும் ஆவடி திருவள்ளுவர் நகர் பகுதி சீல் வைக்கப்பட்டது.

மேலும், இவர் வந்து சென்ற இடங்கள், சந்தித்த நபர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, இவர் தொடர்புடைய நபர்கள் தெரிந்த உடன் அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆவடியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக,  ஆவடி பஸ் நிலையம், இரு பள்ளிகளில் செயல்பட்டு வந்த மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டுகள் இன்று (ஏப்.25) முதல் மூடப்படுகிறது. பொதுமக்கள் காய்கறிகளை வீட்டிலிருந்த படியே வாங்க கூடுதலாக 25 நடமாடும் காய்கறி வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags : Corona ,pharmacist ,vegetable market closures , Woman, Corona, 3 Vegetable Market Closure
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்