×

குக்கர்ல காய்ச்சினா மாட்டிக்குவோம் மூணு இளநி மட்டும் இருந்தால் போதும் மயக்கும் சொர்க்கம் முன்னால நிக்கும்: புது ரூட்டில் இறங்கிய குடிமகன்கள்

சென்னை: ஊரடங்கு நீண்டு கொண்டே செல்கிறது. குடிமகன்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிளாக்குல வாங்கப்போனா, புல்லு விலையில குவார்ட்டற விக்கறாங்க. குடிக்கிற வரைக்கும் ஒரிஜினலான்னு நம்ப முடியல. சானிடைசரும் உசுர வாங்கிருது... ஆனாலும் குடிக்கலேன்னா மனசும் கையும் பதட்டத்துல நடுங்குது என்று அங்கலாய்த்த குடிமகன்களுக்கு கைகொடுத்தது குக்கர் சாராயம்.  பழங்களை வாங்கி வந்து சர்க்கரை, ஈஸ்ட் போட்டு ஊற வைத்து, குக்கரில் டியூப் இணைத்து... காய்ச்சி... வடிகட்டி என ஏகப்பட்ட வழிமுறைகள். ஆனாலும், சரக்குதானே முக்கியம்னு காய்ச்ச ஆரம்பிச்சாங்க. பல வீடுகள்ல உலைக்கு பதிலா சாராயம்தான் கொதிச்சது. மொத்தத்துல சாராயம் வாசனையை ரசிச்சு முடிக்கறதுக்குல்ல போலீஸ் வந்து அள்ளிட்டு போனதும் ரொம்பவே மனசு உடைஞ்சு போயிட்டாங்க. ஐடி ஊழியர்கள் தொடங்கி யாருமே இந்த குக்கர் பரிசோதனையை செய்யாமல் விடவில்லை. ஆனால், கைதானதுதான் மிச்சம். மானமும் போச்சு, மரியாதையும் போச்சு.

 இதனால், பல குடிமகன்கள் குக்கர் சாராயம் காய்ச்ச தயங்க ஆரம்பித்தனர். இதன்பிறகு அவர்களுக்கு புது வழிமுறை கிடைத்து விட்டது. அதாவது, இளநீரை கள்ளாக மாற்றுவது. யூடியூபில் மாற்று வழிமுறையை தேடியவர்கள், கள் தயாரிக்கும் உத்தியை தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் குதிக்கத் தொடங்கினர். காரணம், இதற்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதாக கிடைப்பவை. செலவும் குவாட்டருக்குள்தான் ஆகும் என்பதுதான். மூன்று இளநீர் வாங்கி, யூடியூபில் சொன்னபடி ஐயிட்டங்களை சேர்த்து ஒரு ஜாரில் போட்டு துணியால் கட்டி வைத்தால், 24 மணி நேரத்தில் கிறங்கடிக்கும் கள்ளு ரெடி. வாசனையும் இருக்காது. சில குடிமகன்கள், ஒரு லிட்டரை உள்ளே இறக்கினால் போதை நிச்சயம் என்று சத்தியம் செய்கின்றனர். இதனால் இளநீருக்கு பல இடங்களில் படு கிராக்கி ஏற்பட்டு விட்டதாம். சிலர் கொத்தாக வாங்கிச் செல்கின்றனர் என இளநீர் வியாபாரிகள் கூறுகின்றனர். பாவம், ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலை குடிமகன்களுக்கு ஏற்பட்டு விட்டது. அட, ‘தெளியாம’ இருக்கத்தானே இந்த டெக்னிக் என்கிறீர்களா... அதுவும் சரிதான்.

Tags : paradise ,citizens , just a sniff of a fever, paradise,ront of you:
× RELATED இந்துக்களை இரண்டாம் தர...