×

உணவின்றி தவிக்கும் வடமாநில இளைஞர்கள்: ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இருங்காட்டுகோட்டை, மாம்பாக்கம், வல்லம், வடகால், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு கார், லாரி, செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
மேற்கண்ட தொழிற்சாலைகளில் ஒடிசா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் தங்கி வேலை செய்கின்றனர். தற்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 அமலில் உள்ளது. இதையொட்டி, தொழிற்சாலைகள் மூடபட்டுள்ளன. இதனால் வடமாநில ஊழியர்கள் வேலையின்றி முடங்கி உள்ளனர். அவர்களை வேலைக்காக அழைத்து வந்த ஏஜென்டுகள், பணம், பொருள் உதவி செய்யவில்லை.

அவர்கள், உணவின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள வடமாநில ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நடந்து சென்று, முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற ஆர்டிஓ திவ்யஸ்ரீ, அவர்களிடம் சமரசம் பேசி, அவர்களுக்கு தேவையான உதவிகள் அரசு செய்யும். அனைவரும் அவரவர் இருக்கும் இடங்களுக்கு செல்லுங்கள் என கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Northland ,office blockade ,RTO , Food, Northwest Youth, RTO Office, Siege
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...