அனுஷ்காவால் பிரச்னையா? நிசப்தம் படக்குழு விளக்கம்

சென்னை: நிசப்தம் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்வது தொடர்பாக நடிகை அனுஷ்கா பிரச்னை செய்தார் என்று தகவல் பரவியுள்ளது.

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடித்துள்ள படம் நிசப்தம். கொணா வெங்கட் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய்விட்டது. ஊரடங்குக்கு பிறகும் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு ஆலோசித்தது.

ஆனால் படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் டிஜிட்டலில் வெளியிட கூடாது என்றும் அனுஷ்கா எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அனுஷ்கா மீது கோபத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து பட நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் இந்த படத்துக்கு உறுதுணையாக இருந்தனர். அனுஷ்காவும்  எங்கள் படத்துக்கு முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார். அவர் பிரச்னை செய்வதாக வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>